கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளின் இரண்டாவது கட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
மதிப்பீட்டு நடவடிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை, 29 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு மத்திய நிலையங்ளுக்காகப் பயன்படுத்தப்படும் 6 பாடசாலைகள் குறித்த காலப்பகுதியில் முற்றாக மூடுப்படுவதுடன், ஏனைய 23 பாடசாலைகளும் மூடப்படாது மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதற்கட்டம் கடந்த 23 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment