மேல் மாகாணத்தின் அனைத்து வாகனங்களினதும் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை இன்று (02) முதல், திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் அலுவலகத்தில் புதுப்பித்துக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரதேச செயலகத்தின் நான்காவது மாடியில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரியங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள போக்குவரத்துத் திணைக்களத்திலேயே இதற்கு முன்னர் வாகனங்களின் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்கள் புதுப்பிக்கப்பட்டு வந்தன.
இன்று முதல் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில், வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment