இந்த வருடத்தில் தரம் ஒன்றில் பிள்ளைகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் மாணவர் அனுமதி தொடர்பிலான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் தமது பிள்ளைகளை அனுமதிப்பதில் ஏதேனும் சிக்கல் தோன்றினால் அது தொடர்பில் மாவட்ட கல்வித் திணைக்களத்துக்கு அறிவிக்குமாறு கல்வியமைச்சு, பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, முதலாம் ஆண்டில் பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீடு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment