கட்டுநாயக்க விமான நிலையத்தில், 58 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து இன்று (01) அதிகாலை நாட்டிற்கு வந்த குறித்த இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
22 வயதான இந்திய பிரஜையிடமிருந்து 484 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
No comments:
Post a Comment