வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.
வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (23) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பில் இன்று நடைபெற்ற இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தைத் தொடர்ந்து, குழு நிலையில் குறித்த சட்டமூலம் ஆராயப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது மதிப்பீட்டையடுத்து இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025.05.08ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதற்கு அமைய இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு 06 இலக்க வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகின்றது.
No comments:
Post a Comment