ஜேர்மனிக்கு பயணமாகிறார் ஜனாதிபதி அநுர - News View

About Us

About Us

Breaking

Friday, May 23, 2025

ஜேர்மனிக்கு பயணமாகிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜூன் 10ஆம் தி்கதி ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில், வெளியுறவு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இதனை உறுதிப்படுத்தினார்.

“எமது சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு முன்பு, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டிற்கு வந்தனர். ஆனால், இப்போது அது குறைந்துள்ளது.

ஜேர்மனி சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் ஈர்ப்பதற்கும், இரு நாடுகளும் இதற்கு என்ன செய்ய முடியும் என்பதையும் பார்க்க வேண்டும்.

பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதையும் இலக்காகக் கொள்ள வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment