ஒரு தொகை ஹஸீஸ் போதைப்பொருளை சட்ட விரோமான முறையில் எடுத்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி, கடுகஸ்தொட்ட பகுதியை சேர்ந்த 37 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (01) காலை 5 மணியளவில் சென்னையில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 126 என்ற விமானத்தில் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த நபர் எடுத்து வந்த இரு பயணப் பைகளில் இருந்த டி ஷேர்ட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பொதிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பொதிகளில் 11 இலட்சம் ரூபா பெறுமதியான 1 கிலோ 100 கிராம் ஹஸீஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment