பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர - News View

About Us

About Us

Breaking

Friday, May 23, 2025

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு நேற்றையதினம் (22) பாராளுமன்றத்தில் கூடியபோது, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வழிமொழிந்தார்.

இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment