போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது - News View

About Us

Add+Banner

Monday, May 19, 2025

demo-image

போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

6e0d8131-0ef9-4106-9a80-75cac2487531-copy%20(Custom)
சட்டவிரோதமாக ‘குஷ்’ போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வெளியேறும் முனையத்தில் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது பயணப் பையில் இனிப்புகளுடன் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ கிராம் 910 கிராம் ‘குஷ்’ போதைப் பொருளே இவ்வாறு சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதான சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *