நிலுவை அறவிடப்படாத நிலையில் 1600 கோடி ரூபா வருமானத்தை இழக்க நேரிட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இரண்டு மாத நிலுவையாக இந்த தொகை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நீர் வடிகாலமைப்பு சபை, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் 32 இலட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இவர்களில் ஒரு பகுதியினரே நிலுவைப் பணம் செலுத்தத் தவறியுள்ளனர். இவர்களிடமிருந்து இந்த நிலுவைத் தொகையை அறிவிடவுள்ளதாகவும் நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment