பாடசாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, July 25, 2025

பாடசாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலி

இந்தியாவின் ராஜஸ்தானில் பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜஸ்தானின் - ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரச பாடசாலையில் இன்று (25) காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 40 இற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விபத்து நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 மாணவர்கள் உள்ளே இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கட்டடம் பாழடைந்த நிலையில் இருந்ததாகவும் இது தொடர்பாக முன்னர் பல முறைப்பாடுகள் வந்திருந்த நிலையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள், ஆசிரியர்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment