பொரளை பொது மயான பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதி கஞ்சா போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலே குறித்த சாரதி போதைப் பொருள் பாவித்திருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்வத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்களுடன் குறித்த பார வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயது நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மரம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கிரேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment