ஜேர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வ்ரெட்டம் பேர்க்கில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென்மேற்கு பேடன்-வ்ர்ட்டம்பேர்க் மாகாணத்தில் உள்ள ரீட்லிங்கன் நகருக்கு அருகே காட்டுப் பகுதியில் நேற்று (27) மாலை இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் ரயில் சாரதி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மட்டுமின்றி, 50 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் 25 பேர்களின் நிலை கவலைக்கிடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் Deutsche Bahn நிர்வாகம் இச்சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், விபத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், சுமார் 40 கி.மீ தொலைவுக்கான ரயில் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, Baden-Wurttemberg மாகாண உள்விவகார அமைச்சர் Thomas Strobl தெரிவிக்கையில், விபத்து நடந்தப் பகுதியில் கடுமையான காற்று வீசியதாகவும், மழை காரணமாக விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார் 100 பயணிகளுடன் சிக்மரிங்கென் நகரத்திலிருந்து உல்ம் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோதே குறித்த ரயில் தடம் புரண்டது. ஜேர்மனியில் பயணிகள் அடிக்கடி ரயில் தாமதங்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளில், குறிப்பாக உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்காக, பல நூறு பில்லியன் யூரோக்களை முதலீடு செய்வதாக ஜேர்மனி அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஜூன் 2022 இல், தெற்கு ஜேர்மனியில் உள்ள பவேரியன் ஆல்பைன் ரிசார்ட் அருகே ஒரு ரயில் தடம் புரண்டு 4 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment