ஓரின திருமணங்களை அனுமதிக்கக் கூடாது - பேராயர் - News View

About Us

About Us

Breaking

Monday, July 28, 2025

ஓரின திருமணங்களை அனுமதிக்கக் கூடாது - பேராயர்

ஒரே பாலின திருமணங்களை அனுமதிக்கக் கூடாதென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமைக்கு அப்பாற்பட்டதென்றும், இதனால், இத்திருமணத்தை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.

பேருவளை புனித அன்னம்மாள் ஆலய திருவிழா திருப்பலியில் மறையுரை நிகழ்த்தும்போதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பாரம்பரிய குடும்ப அலகைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் பேராயர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். 

பல்வேறு பிரசாரங்கள் மற்றும் திருமணத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், தற்காலிக தீர்வுகளைத் தேடுவதால் புதிய தலைமுறையினர் தவறாக வழிநடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே பாலின திருமணம் ஊக்குவிக்கப்படுகிறது. இது மனித உரிமையா?இரண்டு ஆண்கள் எவ்வாறு ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்ப முடியும்? அவர்களுக்கு எப்படி குழந்தைகள் பிறக்கும்? என அவர் பல கேள்விகளையும் எழுப்பி யுள்ளார்.

முன்னைய காலத்தில் பெற்றோரின் பராமரிப்பின் கீழ் அவர்களின் ஆசீர்வாதத்துடன் இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டனர். இத்தகைய திருமணங்கள் இக்கால திருமணங்களை விட மிகவும் வெற்றிகரமாக காணப்பட்டதாகவும் பேராயர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment