பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று (20) முதன்முறையாக கூடவுள்ளது.
சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜயனி வேகடபொல, அரச சட்டத்தரணி ஷக்தி ஜாகொட ஆரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சாட்சிகளினூடாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என்பது தொடர்பில் குறித்தக் குழுவினால் ஆராயப்படுகின்றது.
208 பக்கங்களைக் கொண்ட ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்யும்போது வெளிக்கொணரப்படும் உண்மைகளின் அடிப்படையில் இறுதி அறிக்கையை உடனடியாக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறித்தக் குழு தெரிவித்தது.
No comments:
Post a Comment