மக்கள் காங்கிரஸின் இரண்டு தவிசாளர்கள் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 8, 2025

மக்கள் காங்கிரஸின் இரண்டு தவிசாளர்கள் இடைநிறுத்தம்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு, கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்பட்ட இரு பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளதாக, அக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கட்சியின் தீர்மானத்தை மீறி தவிசாளர் பதவியை பொறுப்பேற்ற கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எச்.பைறூஸ் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.அஸ்பர் ஆகியோரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி, கடந்த 03ஆம் திகதி கடிதம் அனுப்பப்ட்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இனைந்து, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டு, தங்களுக்கான தவிசாளர் பதவியை முஸ்லிம் காங்கிரஸின் முழுமையான ஆதரவுடன் பெற்றுக்கொண்டு கட்சியின் தீர்மானத்தை மீறி, அப்பிரதேச மக்களின் வாக்குகளுக்கு மாற்றமாக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Zajil News

No comments:

Post a Comment