837 பவுண் தங்கத்துடன் 2 சந்தேகநபர்கள் கைது : விமான நிலைய CID இற்கு கிடைத்த இரகசிய தகவல் - News View

About Us

About Us

Breaking

Friday, May 16, 2025

837 பவுண் தங்கத்துடன் 2 சந்தேகநபர்கள் கைது : விமான நிலைய CID இற்கு கிடைத்த இரகசிய தகவல்

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 6.7 கிலோ கிராம் (837.5 பவுண்) தங்கத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (15) குற்றப் புலனாய்வுத் திணைக்கள விமான நிலைய உப பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கையில், குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 4 ¼ கிலோ கிராம் தங்கத்துடன் ஒரு சந்தேகநபரும், 2 கிலோ 450 கிராம் தங்கத்துடன் மற்றொரு சந்தேகநபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 27 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கொழும்பு 06, கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment