ரணில் பதவியை தக்க வைக்க வழங்கிய இலஞ்சமே இழப்பீடு : பேரவாவியில் முழ்கடித்து விட்டு நன்றாக நீந்தி நீந்தி குளித்துள்ளனர் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, February 9, 2025

demo-image

ரணில் பதவியை தக்க வைக்க வழங்கிய இலஞ்சமே இழப்பீடு : பேரவாவியில் முழ்கடித்து விட்டு நன்றாக நீந்தி நீந்தி குளித்துள்ளனர் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

24-673c7e9fa4bca%20(Custom)
(எம்.வை.எம்.சியாம்)

ஆட்சியாளர்கள் தமது கட்சியின் ஆதரவாளர்களை பேரவாவியில் மூழ்கடிக்க செய்து விட்டு தாம் நட்டயீட்டு சமுத்திரத்தில் நன்றாக நீந்தி குளித்துள்ளனர். நபர் ஒருவருக்கு இழப்பீட்டு தொகையாக 25 இலட்சம் ரூபாவையே பெற்றுக் கொள்ள முடியும். இருப்பினும் 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 இலட்சம் முதல் 980 இலட்சம் வரை நட்டயீட்டை பெற்றுக் கொண்டுள்ளனர். ரணில் விக்கிமரசிங்க தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தன்னுடன் இருந்தவர்களுக்கு அரச திறைசேரியிலிருந்து பெற்றுக் கொடுத்த இலஞ்சமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பேராதனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, நட்டயீடு வழங்கப்பட்ட காலப்பகுதியில் அந்த பகுதிக்குரிய பிரதேச செயலாளர்கள், மதீப்பிட்டாளர்கள் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அப்போதைய ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவாக இருந்த பிரசன்ன ரணதுங்கவினால் கடிதம் அனுப்பட்டு பாராளுமன்றத்துக்கு அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு சென்றிருந்த அதிகாரிகள் அப்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததுடன் அவர்களுக்கு அந்த காலப்பகுதியில் அதிகமாக மதிப்பீடு செய்யுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டில் பேரிடர் ஒன்று ஏற்படுமனால் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாவையே வழங்க முடியும். உண்மையில் அந்த தொகை கிடைப்பதில் சிரமம் உள்ளது.

ஆனால் அந்த காலப்பகுதியில் முறையாக நட்டயீட்டை பெற்றுக் கொள்வதில் முறைமை ஒன்று இருக்கவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க சட்டதிட்டங்களை மாற்றி தேவையான வகையில் நட்டயீட்டை பெற்றுக் கொள்வதற்கான முறைமை உருவாக்கியுள்ளார்.

இங்கு சில பிரச்சினைகள் உள்ளன. 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 இலட்சம் முதல் 980 இலட்சம் வரை நட்டயீட்டை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவர்கள் நட்டயீட்டை மாத்திரம் அல்ல. சில நிறுவனங்களிடமிருந்து காப்புறுதிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். நாம் வெளியிட்ட பெயர் பட்டியிலிருந்து யார் காப்புறுதிகளை பெற்றுக் கொண்டுள்ளனர் என்பதை காப்புறுதி நிறுவனங்கள் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் .

அடுத்ததாக அவர்களது அசையும், அசையாத சொத்துக்கள் 800, 900 இலட்சமாக இருந்தால் அவர்களது சொத்துக்கள் தொடர்பிலான அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்க வேண்டும்.

அதிக நட்டயீட்டை பெற்றுக் கொள்வதற்காக சிலர் தமது வீட்டில் நகைகள் இரத்தினகற்கள் இருந்தாக தெரிவித்துள்ளனர். நட்டயீட்டைப் பெற்றுக் கொண்டவர்களின் பிரதேசங்களில் உள்ள மக்கள் எம்மை அழைத்து அவ்வாறான சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனக்கூறுகிறார்கள்.

இரண்டு ஜன்னல்கள் மாத்திரமே சேதமடைந்திருந்ததாக கூறுகின்றனர். ஆனால் இவர்கள் எவ்வாறு இந்தளவு நிதியை பெற்றுக் கொண்டனர்? அவர்கள் தமது கட்சியின் ஆதரவாளர்களை பேரவாவியில் முழ்கடிக்கச் செய்து விட்டு தாம் நட்டயீட்டு சமுத்திரத்தில் நன்றாக நீந்தி நீந்தி குளித்துள்ளனர். இதுவே தற்போது புலப்படுகிறது.

எனவே, இது தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுப்போம். இந்த நட்டயீடு மதிப்பீடு செய்யப்பட்ட விதம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தமக்கு வழங்கப்பட்ட நட்டயீடு போதாது என ஒருவர் கூறுவதை பார்த்தேன். இவர்கள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களை கொண்டிருந்தார்கள் என்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும்.

ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஜனாதிபதி பதவியை பெற்றுக் கொடுத்தமைக்காவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வேண்டும் என்பதற்காகவும் தன்னுடன் இருந்தவர்களுக்காக திறைசேரியிலிருந்து பெற்றுக் கொடுத்த இலஞ்சமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *