தென்கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு முன்மொழிந்த பெயர்களை நிராகரித்தார் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2025

தென்கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு முன்மொழிந்த பெயர்களை நிராகரித்தார் ஜனாதிபதி

றிப்தி அலி

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயர்ப்பட்டியல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிராகரிப்பினை விடியல் இணையத்தளத்திற்கு உறுதிப்படுத்திய கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரிய, விரைவில் புதிய விண்ணப்பம் கோருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு நேற்று (29) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் தென் கிழக்குபல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவி வெற்றிடமாகக் காணப்படுகின்றது. இதற்காக வேண்டி கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

இதில் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்ட பேராசிரியர்களான ரமீஸ் அபூபக்கர், ஏ.எம். றஸ்மி மற்றும் ஹன்சியா ரவூப் ஆகியோரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதியான கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பதில் உப வேந்தராக கடந்த ஐந்து மாதங்களாக செயற்படுட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment