நாளை முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் சட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 7, 2025

நாளை முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் சட்டம்

ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஔிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தமது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை எல்ல-வெல்லவாய வீதியின் 24ஆவது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்புடன் பஸ் மோதி, வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியை உடைத்து சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

தங்காலை நகர சபையின் ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

32 பேர் பயணித்த இந்த பஸ்ஸில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 13 பேர் இன்னும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment