பொலிஸ் நிலையத்தில் கைதான சிறுவன் துன்புறுத்தல் : ஹதீஸை சுட்டிக்காட்டி தீர்ப்பளித்த நீதிபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 4, 2025

பொலிஸ் நிலையத்தில் கைதான சிறுவன் துன்புறுத்தல் : ஹதீஸை சுட்டிக்காட்டி தீர்ப்பளித்த நீதிபதி

கைது­ செய்­யப்­பட்ட சிறு­வ­னொ­ருவன் பொலிஸ் நிலை­யத்தில் துன்புறுத்­தப்­பட்ட விவ­காரம் தொடர்பில் தொடுக்­கப்­பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்­பான தீர்ப்பை அறிவிக்கும்போது நீதிவான் ஹதீஸ் ஒன்றை மேற்­கோள்­காட்­டிய சம்ப­வ­மொன்று நேற்­று­முன்­தினம் (02) கல­கெ­தர நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்­றுள்­ளது.

அத்­துடன், எவ­ரேனும் சிறு­வ­ரொ­ரு­வரை கைது செய்யும் பொழுது அவரை நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்கு முன்னர் 6 மணி நேரங்­க­ளுக்குள் அவ­ரது பெற்றோர் அல்­லது பாது­கா­வ­ல­ளர்­க­ளுடன் சந்­திப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்­கு­ளுக்கும் ஆலோசனை வழங்­கு­மாறு பொலிஸ்மா அதி­ப­ருக்கு உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

16 வய­து­டைய சிறுவன் ஒரு­வனை கைது செய்த ஹத்­த­ர­லி­யத்த பொலிஸார் அவரை சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கி­யமை தொடர்பில் உயர் நீதி­மன்­றத்தில் தொடுக்­கப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனுவுக்­கான தீர்ப்பை அறி­வித்து இந்த விட­யத்தை அ­றி­வித்­துள்­ளது.

நீதி­ய­ரசர் ஜனக் டீ சில்வா இந்த தீர்பை அறி­வித்­துள்­ள­துடன் நீதியரசர்­க­ளான மேனகா விஜே­சுந்­தர மற்றும் சம்பத் பி அபேகோன் ஆகியோர் இந்த தீர்ப்பு தொடர்பில் தமது இணக்­கத்தை வெளிப்படுத்தி­யுள்­ளனர்.

2022ஆம் ஆண்டு இல்ஹாம் அகமட் என்னும் 16 வயது சிறுவன் ஒருவர் தங்க ஆப­ரண திருட்டு குற்­றச்­சாட்­டின் ­பெ­யரில் ஹத­ர­லி­யத்த பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

எனினும் கல­கெ­தர நீதிவான் நீதி­மன்­றத்தில் குறித்த சிறு­வன் ஆஜர்படுத்­தப்­பட்டு குறித்த வழக்கில் இருந்து நீதி­மன்­றத்தால் விடுவித்து விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். 

எவ்­வா­றா­யினும் பொலிஸார் குறித்த சிறு­வனைக் கைது செய்தபோது அந்த சிறு­வனை தாக்­கி­யுள்­ள­தோடு அவ­ரது கண்ணில் மிளகாய்சாறு பிழிந்து சித்­தி­ர­வதை செய்­ய­த­தாக உயர் நீதிமன்றத்தில் தொடுக்­கப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

குறித்த சிறு­வனும் சிறு­வனின் தாயா­ரான சித்தி நிஹாரா என்­ப­வரும் மனு­தா­ரர்­க­ளாக பெய­ரி­டப்­பட்டு தாக்­கல் ­செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மனு உயர் நீதிமன்­றத்தில் விசா­ரணை செய்­யப்­பட்டு நேற்றுமுன்­தினம் அதன் தீர்ப்பு அறி­விக்­கப்­பட்­டது.

குறித்த தீர்ப்பை அறி­வித்த உயர் நீதி­மன்றம் குறித்த சிறு­வ­னுக்கு ஹத­ரலி­ய­த்த பொலிஸ் நிலை­யத்­தி­னு­டைய அப்­போதை பொறுப்பதிகாரி தனது சொந்த நிதி­யி­லி­ருந்து 3 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்த வேண்டும் எனவும் சிறு­வனின் தாயா­ருக்கு தனது சொந்த நிதி­யி­லி­ருந்து குறித்த பொலிஸ் பொறுப்­ப­தி­காரி 75 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்த தீர்பை எழு­தி­யி­ருக்கும் நீதி­ய­ரசர் ஜனக் டி சில்வா தாய் மற்றும் பிள்­ளை­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்பை இஸ்லாம் மற்றும் பெளத்த மதங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சித்­தாத்­தங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு விளக்­கி­யுள்ளார்.

குறிப்­பாக நபிகள் நாயகம் ஸல்­லல்­லாஹு அலை­ஹி­வ­ஸல்லாம் அவர்­க­ளு­டைய ஹதீஸ் ஒன்றை குறித்த தீர்ப்பில் இணைத்­துள்ள நீதிய­ரசர் ஜனக் டி சில்வா, நபி­க­ளா­ரிடம் ஒருவர் வந்து யுத்­தத்­திற்கு செல்ல அனு­மதி கோரியபோது உங்­க­ளுக்கு தாயார் இருக்கின்றாரா என்று கேட்டு, தாயாரின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது என கூறியதாக தெரிவிக்கப்படும் ஹதீஸை குறித்த தீர்ப்பில் இணைத்துள்ளார்.

இதனைவிட புத்த பெருமானின் தாய் மற்றும் பிள்ளைகளுக்கிடையிலான அன்பை வெளிப்படுத்தும் விடயம் ஒன்றினையும் குறித்த தீர்ப்பில் ஜனக் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Vidivelli

No comments:

Post a Comment