புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 27, 2025

புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம்

புதிய விமானப் படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க  நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விமானப் படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

விமானப் படையின் 20 ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க வரலாற்றில் இணைகிறார்.

ஜனவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு தற்போதைய விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, எதிர்வரும் 29 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

வீர விக்கிரம விபூஷன, ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் ஆகிய மூன்று விருதுகளையும் ரணசூர பதக்கத்தையும் எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment