ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் ஜே.வி.பியினரே என கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்தார்.
சிறையிலிருந்து நேற்று விடுதலையான ஞானசார தேரர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனைத் தெரிவித்தார்.
குண்டுத் தாக்குதலை நடத்திய அடிப்படைவாத கும்பல் ஜே.வி.பியிடம்தான் ஒளிந்து கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாத கும்பல், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த ஐக்கிய மக்கள் சக்தியினரிடமே ஒழிந்து கொண்டது.
இவ்வாறிருக்கையில், ஜப்பானுக்கு சென்றுள்ள அனுரகுமார திசாநாயக்க அங்கு ஒரு நிகழ்வில் உரையாற்றும்போது தாம், ஆட்சிக்கு வந்தால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆராய்வதாக தெரிவித்திருந்தார். இச்செய்தியை இரண்டு தினங்களுக்கு முன் நான், அவதானித்தேன்.
இவர்களுக்குத்தான் அந்த ஆரம்பமும் முடிவும் தெரியும். ஏனென்றால் அவர்களிடமே ஈஸ்டர் குண்டுத் தாரிகளான அடிப்படை வாதிகள் ஒளிந்திருந்தனர்.
அத்துடன் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான் அறிந்தபோது, பேராயர் கர்தினாலுடன் அது தொடர்பில் தெரிவித்தேன். சஹரான் தொடர்பிலும் காத்தான்குடி சம்பவம் தொடர்பிலும் நான் அவருக்கு தெளிவுபடுத்தினேன். அவரும் இது தொடர்பில் தெரியவந்துள்ளதாக எனக்கு கூறினார்.
இவ்வாறு எம்மால் வெளியிடப்பட்ட இஸ்லாமிய அடிப்படை வாதிகள், ஜேவிபி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரிடமேதான் ஒளிந்திருந்தனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment