மிகவும் பயங்கரமான தாக்குதல் குறித்து ஷேக் ஒருவர் எச்சரிக்கை விடுத்தார் - ஞானசார தேரர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 23, 2024

மிகவும் பயங்கரமான தாக்குதல் குறித்து ஷேக் ஒருவர் எச்சரிக்கை விடுத்தார் - ஞானசார தேரர்

இலங்கையில் சுமார் 2000 க்கும் மேற்பட்டவர்களை பலி கொள்ளக்கூடிய மிகவும் பயங்கரமான தாக்குதல் குறித்து ஷேக் ஒருவர் 2014 ஆம் ஆண்டு எச்சரிக்கை விடுத்தார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி ஷேக் ஒருவர் பயங்கரவாத தாக்குதல் திட்டங்கள் குறித்த தகவல்களை எனக்கு தெரிவித்தார்.

திக்வெலவிற்கு வந்து தன்னை சந்திக்குமாறு அவர் என்னை கேட்டுக்கொண்டார்.

தங்களால் இந்த தாக்குதல் குறித்து தெரிவிக்க முடியாததால் எங்களை அது குறித்து நாட்டிற்கு தெரியப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தாங்கள் விடயங்களை பகிரங்கப்படுத்தினால் தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என அவர் அச்சம் கொண்டிருந்தார்.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் செல்வாக்கு காரணமாக இஸ்லாமிய தீவிரவாதிகள் மிகவும் பயங்கரமான தாக்குதலொன்றை ஆசியாவில் மேற்கொள்வதற்கு இலங்கையை தெரிவு செய்துள்ளனர் என அவ்வேளை பாதுகாப்பு செயலாளராகயிருந்த கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவிக்குமாறு அந்த ஷேக் என்னை கேட்டுக் கொண்டார்.

அந்த தாக்குதல் இஸ்லாத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் விதத்தில் காணப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் பிரதான மதங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்களால் 2000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவார்கள், மதநிகழ்வுகளில் இந்த தாக்குதல்கள் இடம்பெறலாம் என அவர் தெரிவித்திருந்தார்.

கடும் எதிர்வினைகள் எழக்கூடும் என்ற போதிலும் இது குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு தெரிவிப்பதை தவிர எங்களிற்கு வேறுவழியிருக்கவில்லை. 

இதனை தொடர்ந்து பல அரசியல்வாதிகள் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள் நாங்கள்தான் தீவிரவாதிகள் என்றார்கள் ஆனால் பாதுகாப்ப செயலாளர் அந்த தாக்குதலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.

No comments:

Post a Comment