நஸீர் அஹமட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேறு எவரையும் பாதிக்காது - லக்ஷ்மன் விஜயமான்ன - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, October 10, 2023

demo-image

நஸீர் அஹமட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேறு எவரையும் பாதிக்காது - லக்ஷ்மன் விஜயமான்ன

examination_department%20(Custom)
(எம்.ஆர்.எம்.வசீம்)

அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீரப்பு வேறு யாருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. நீதிபதிகளின் வழக்கு தீர்ப்பில் அது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு வேறு யாருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் நஸீர் அஹமட்டுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. நீதிமன்றத்துக்கு பதில் அளிக்காமல் காலம் கடத்தி வந்திருக்கிறார். அதன் பிரகாரமே வழக்குத் தீர்ப்பு இவ்வாறு வழங்கப்பட்டிருக்கிறது என உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் 5 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நஸீர் அஹமட்டுக்கு எதிராக குற்றாச்சாட்டு தெரிவித்து அவருடைய கட்சி வழக்குத் தாக்கல் செய்திருக்கும்போது, அது தொடர்பில் தனது நியாயத்தை தெரிவிக்கும் உரிமை அவருக்கு இருந்தது. ஆனால் நஸீர் அஹமட் அதனை செய்யத் தவறி இருக்கிறார். அதன் காரணமாகவே அவருக்கு எதிராக அவரது கட்சி எடுத்த தீர்மானம் சரி என தெரிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அதனால் நஸீர் அஹமட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு, ஏனைய கட்சி மாறியவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. என்றாலும் நஸீர் அஹட்டுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருத்தம் என ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *