2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளது.
பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை நேற்றையதினம் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment