மக்கள் எதிர்பார்க்கும் தலைவருக்கே தலைமைத்துவத்தை வழங்குவோம் - மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, October 6, 2023

demo-image

மக்கள் எதிர்பார்க்கும் தலைவருக்கே தலைமைத்துவத்தை வழங்குவோம் - மஹிந்த ராஜபக்ஷ

386656705_862057665286430_7766875809496318307_n%20(Custom)
மக்கள் எதிர்பார்க்கும் தலைவருக்கு தமது அணி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு மயூராபதி ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர், 'நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்துக்கு தெரிவு செய்யப்படுவார்.

எமது அணியில் இளைஞர் அணியினர் பலரும் உள்ளனர். எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆதரவை வழங்கி முன்கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான சிரேஷ்ட பிரஜை ஒருவருக்கு கட்சி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்க்கிறது.

மக்கள் ஏற்றுக் கொள்ளும் உறுப்பினருக்கு தலைமைத்துவம் வழங்கப்படும். மக்களே எனக்கும் தலைமைத்துவத்தை வழங்கினார்கள் எதிர்காலத்திலும் அவ்வாறே இடம்பெறும் எனத் தெரிவித்தார்.

நீண்ட காலமாக பொது விடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாட்டின் பல்வேறு வணக்கஸ்தலங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *