வடமேல் மாகாணத்தில் உள்ள 240 பாடசாலைகளுக்கு யானைகளால் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அதில் கிட்டத்தட்ட 179 பாடசாலைகள் மிகவும் ஆபத்து நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி முதிதா ஜயரத்ன தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தின் உயர் கல்வி வலயத்தில் உள்ள 38 பாடசாலைகளும், நிக்கவெரட்டிய பிரதேசத்தில் உள்ள 57 பாடசாலைகளும், இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள 4 பாடசாலைகளும் யானைகள் அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களில் அமைந்துள்ளன.
குருநாகல் மாவட்டத்தில் தினமும் 61 பாடசாலைகளுக்குள் யானைகள் நுழைந்து சேதம் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், புத்தளம் மாவட்டத்தில் உள்ள 32 பாடசாலைகளில் 23 பாடசாலைகளின் பதிவு அறிக்கைகளின்படி யானைகள் பாடசாலைகளுக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்துவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பாடசாலைகளில் பாடசாலை வளங்கள் சேதமடைந்துள்ள போதிலும் பாடசாலை மாணவர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
யானைகளின் அச்சுறுத்தலைக் குறைப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment