கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் ஆட்சி அமைக்கும் : போதிய பெரும்பான்மை எம்மிடமே உள்ளது என்கிறார் அமைச்சர் வசந்த சமரசிங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, May 22, 2025

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் ஆட்சி அமைக்கும் : போதிய பெரும்பான்மை எம்மிடமே உள்ளது என்கிறார் அமைச்சர் வசந்த சமரசிங்க

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் ஆட்சி அமைக்குமென வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற நிதி சட்ட கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டை கைப்பற்ற எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சியின் பக்கம் முன்னர் சாய்ந்திருந்த பல சுயேச்சைக் குழுக்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் இணைகின்றனர். 

எதிர்க்கட்சியினர் இந்த சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை அணிதிரட்ட முயற்சித்தனர். இதன்போது, பல உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். 

பாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர விரும்பினால் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதை வரவேற்பதாகவும், பாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுடன் இணைந்த பல உறுப்பினர்கள் தம்முடன் ஏற்கனவே தொடர்புகொண்டு அவ்வாறு செய்ய ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

கொழும்பு மேயராக வேண்டுமென்ற முயற்சியில் பாராளுமன்றத்திலிருந்து இராஜினாமா செய்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மீண்டும் ஒருமுறை மாநகர சபைக்கு வெளியே இருந்து அதற்கான முயற்சிகளை வழிநடத்த முயன்றார். ஆனால் அதிகாரத்தைப் பெறுவதில் அவர் தோல்வியடைந்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment