பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட திடீர் மின்சார துண்டிப்பு காரணமாக விமானப் போக்குவரத்து முடங்கியது.
361 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய 65 ஆயிரம் பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
மின் தடை காரணமாக மணிலா வழியாக செல்லக்கூடிய விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், வெவ்வேறு நாடுகளுக்கு அந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
இது பற்றிய புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளிவந்துள்ளன.
மின் விநியோகத்திற்கான இருப்பு இருந்த போதிலும், அதுவும் போதியளவு மின்சாரம் வழங்க முடியாமல் போயுள்ளது.
இதற்காக பிலிப்பைன்ஸின் போக்குவரத்து செயலாளர் ஜெய்ம் பாடிஸ்டா விமான பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment