நாட்டில் பத்து முதியவர்களில் ஒருவர் சிறுநீரக நோயாளியாக இருப்பதாக வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணங்களாக அமைவதாகவும் வைத்தியர் சங்கத்தின் பொருளாளரும், சிறுநீரக நோய் நிபுணருமான வைத்தியர் உதான ரத்னபால தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த சிறுநீரக நோய்களுக்கான நிபுணர் வைத்தியர் உதான ரத்னபால, நாட்டில் சிறுநீரக நோய் நிலைமைகள் தற்போது மிகவும் மோசமாக உள்ளன. பத்து முதியர்களில் ஒருவருக்கு சிறுநீரக நோய் உள்ளது.
அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கதிர்காமம் பகுதிகளில் கண்டறியப்படாத சிறுநீரக வியாதிகள் உள்ளதாகக் கருதுகிறோம்.
கடந்த 2005 மற்றும் 2015 வருடங்களுக்கிடையில் இது எங்கள் முக்கிய பிரச்சனையாகக் காணப்பட்டது. ஆனால் இப்போது இந்நிலைமை மாறிவிட்டது.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தாலே சிறுநீரக நோய் ஏற்படுகிறது.
எனினும் வரண்ட மண்டலத்தில் கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவே உணர்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நோயாளி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
No comments:
Post a Comment