முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் - பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 26, 2025

முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் - பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

நாட்டில் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. உற்பத்தி பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் இவ்வாண்டு 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேக இலக்கை அடைய முடியும். அவ்வாறு ஏற்பட்டால் 2028 இல் கடனை மீளச் செலுத்தக்கூடிய வகையில் பொருளாதாரம் ஸ்திரமடையும் என பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இவ்வாண்டு முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.8 சதவீதமாகும். எவ்வாறிருப்பினும் இவ்வாண்டு 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

முதலாம் காலாண்டில் கிடைக்கப் பெற்றுள்ள பொருளாதார வளர்ச்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இவ்வாண்டு அரசாங்கம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும் என்று நம்புகின்றோம்.

எவ்வாறிருப்பினும் அந்த இலக்கை அடைவதற்கு விவசாயம் உள்ளிட்ட சகல துறைகளும் உற்பத்தி பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய வேண்டும். அவ்வாறு உற்பத்தி பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் 5 - 10 சதவீத பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடைய முடியும்.

இந்த இலக்கை அடைய முடியுமாக இருந்தால் 2028 இல் கடனை மீளச் செலுத்தக் கூடியளவு சிறந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றார்.   

No comments:

Post a Comment