அரச தொழில் முயற்சி ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதும் 60 : 2023 ஜனவரி முதல் அமுல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 4, 2022

அரச தொழில் முயற்சி ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதும் 60 : 2023 ஜனவரி முதல் அமுல்

அரச தொழில் முயற்சி ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதும் 60 ஆக மாற்றும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளவாறு, அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளில் பணி புரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது 60 ஆக திருத்த நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, 2023.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அதற்கான ஒழுங்குவிதிகளை விதித்து ஏற்புடைய சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தெசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment