ஞானசார தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு கால எல்லை நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

ஞானசார தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு கால எல்லை நீடிப்பு

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை மேலும் 3 வாரங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஒக்டோர் 26ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் தாபிக்கப்பட்ட குறித்த செயலணியின் கால எல்லை கடந்த மே 27ஆம் திகதி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், அதன் பணிகளை நிறைவு செய்யும் பொருட்டு மேலும் 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டு, அது தொடர்பான அறிவித்தல் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment