பண்டாரகம, அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிர்வரும் ஜூன் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (01) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (27) தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பாததால் சிறுமி காணாமல் போனதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் சடலம் மறுநாள் (28) அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் இருந்து மீட்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் 29 வயதான சந்தேகநபர் கடந்த திங்கட்கிழமை (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூக்கு மற்றும் வாயின் ஊடாக தண்ணீர் மற்றும் சேறு சென்றதன் காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்திருந்தது.
No comments:
Post a Comment