(எம்.வை.எம்.சியாம்)
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மத்திய நிலையமொன்றில் மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், அனுராதபுரம் - ஹிடோகமவில் உள்ள களுவிலாசேன பரீட்சை நிலையத்தில் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட ஆசிரியரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment