தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் இடையே மோதல் : 100 பேர் பலி, 40 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் இடையே மோதல் : 100 பேர் பலி, 40 பேர் காயம்

வடக்கு சாட்டின் தொலைதூரப் பகுதி ஒன்றில் தங்கச் சுரங்க தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 100 பேர் வரை கொல்லப்பட்டு மேலும் 40 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண மோதல் தீவிரம் அடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் தாவூத் யாயா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

லிபிய நாட்டு எல்லைக்கு அருகில் இருக்கும் மலைப் பிரதேசமான கெளரி பெளகுதி மாவட்டம் சாட் மற்றும் அண்டை நாடுகளில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களை கவர்ந்த பகுதியாகும். 

மே 23ஆம் திகதி இந்த மோதல் ஏற்பட்டிருப்பதோடு தற்போதே அது பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

அந்தப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த பெரும் எண்ணிக்கையான படையினர் அனுப்பப்பட்டிருப்பதாக ஜெனரல் பிராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

மொரிடானியா மற்றும் லிபியாவில் இருந்து வந்தவர்களிடையேயே மோதல் ஏற்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இதில் தலையிடச் சென்ற படையினர் மக்கள் மீது சூடு நடத்தி இருப்பதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment