வவுனியா - கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்ட நிலையில் குறித்த சிறுமியின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம் நிலவியதினையடுத்து சிறுமியின் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (01) பிற்பகல் சட்ட வைத்திய அதிகாரியினால் சடலம் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
இவ் உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுஜன் தெரிவிக்கையில்,
சிறுமி உடற்பகுதிக்குள் அதிகளவில் நீர் சென்றமையினால் மூச்சுதிணரல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதுடன் சிறுமியின் உடலில் எவ்வித காயங்களோ அல்லது எவ்வித தடயங்களோ காணப்பட்டவில்லை என தெரிவித்தார்.
கணேசபுரம் 08 ஆம் ஒழுங்கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது மாணவி ராசேந்திரன் யதுர்சி நேற்று முன்தினம் இரவு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று முன்தினம் மாலை மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது மாணவியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment