வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் - பிரதமர் ரணில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் - பிரதமர் ரணில்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திறைசேரிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment