பெறுமதி சேர் வரியை (VAT) அதிகரிப்பதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல், நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (01) முதல் அமுலுக்கு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரியானது,
(a) 2018, நவம்பர் 01 திகதியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 2095/20 இன் அட்டவணை யின் நிரல் I இல் குறிப்பிடப்பட்டுள்ள H.S. குறியீட்டுக்கு அமைய நிரல் II இல் உள்ள பொருட்களின் இறக்குமதிக்கு நிரல் III இல் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தில் அறவிடப்படும் எனவும்
(b) மேற்குறிப்பிட்ட உட்பிரிவு (a) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் இறக்குமதியைத் தவிர ஏனைய பொருட்கள் அல்லது சேவைகளின் இறக்குமதி மற்றும் / அல்லது விநியோகத்திற்கு பன்னிரண்டு சதவீதம் (12%) வரி அறவிடப்படும்.
2. 2005 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டு, 2019 நவம்பர் 29 திகதியிட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 2151/52 இல் வெளியிடப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் பிரிவு 2 (அ) இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆணை இதன் மூலம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது.
3. இவ்வுத்தரவு 2022 ஜூன் 01 முதல் அமுலுக்கு வரும்.
இது தொடர்பான முழுமையான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment