இலங்கையிலிருந்து ஹஜ் கடமைகளுக்கு எவரையும் அனுப்புவதில்லை என தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

இலங்கையிலிருந்து ஹஜ் கடமைகளுக்கு எவரையும் அனுப்புவதில்லை என தீர்மானம்

(எம்.வை.எம்.சியாம்)

இந்த ஆண்டு ஹஜ் கடமைகளுக்கு ஹஜ்ஜாஜிகளை அனுப்புவதில்லை என இலங்கை தீர்மானித்துள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த மாதம் சவுதி அரேபியா அரசாங்கம் உள்நாட்டு பிரஜைகளையும் சேர்த்து ஒரு மில்லியன் முஸ்லிம்களுக்கு புனித நகரமான மக்காவிற்கு ஹஜ் கடமைகளுக்காக செல்ல அனுமதிப்பதாக அறிவித்ததை அடுத்து இந்த ஆண்டு 1,585 இலங்கையர்கள் ஹஜ்ஜை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நாடு எதிர்கொள்ளும் டொலர் நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியனுக்கும் குறைவாக இருப்பதாகவும் மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இலங்கை யாத்திரிகள் முழு ஹஜ் நடவடிக்கைகளுக்கும் சுமார் 10 மில்லியன் டொலர்கள் செலவாகும். இது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையுடன் ஒப்பிடும்போது இது ஒரு பெரிய தொகையாகும்.

இந்நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஹஜ்ஜை கடமையை கைவிடுவதற்கான முடிவு, நாட்டின் நலனுக்காக புனித யாத்திரை இவ்வருடம் மேற்கொள்ளாதிருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment