அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை ரி20 அணி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை ரி20 அணி அறிவிப்பு

எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியலை, இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

இப்போட்டிகள் எதிர்வரும் ஜூன் 07, 08, 11ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதோடு, முதல் இரு போட்டிகள் கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்திலும், மற்றைய போட்டி கண்டி, பல்லேகலை மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜூன் 14 - 24 வரை 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், ஜூன் 29 - ஜூலை 08 வரை இடம்பெறவுள்ளது.

தசுன் ஷானக தலைமையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட ரி20 அணி வருமாறு,

தசுன் ஷானக (தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
தனுஷ்க குணதிலக்க
குசல் மெண்டிஸ்
சரித் அசலங்க
பானுக ராஜபக்ஷ
நுவனிந்து பெனாண்டோ
லஹிரு மதுஷங்க
வணிந்து ஹசரங்க
சாமிக கருணாரத்ன
துஷ்மந்த சமீர
கசுன் ராஜித
நுவன் துஷார
மதீஷ பத்திரண
ரமேஷ் மெண்டிஸ்
மகேஷ் தீக்ஷண
பிரவீன் ஜயவிக்ரம
லக்‌ஷான் சந்தகன்

மேலதிக வீரர்கள்
ஜெப்ரி வந்தர்சே
நிரோஷன் திக்வெல்ல

No comments:

Post a Comment