உலக சுற்றாடல் அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதனூடாக, சுற்றாடல்த்துறை அமைச்சை வினைத்திறனுள்ளதாக மாற்ற முடியுமென அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுற்றாடல்த்துறை அமைச்சின் கீழுள்ள திணைக்கள தலைவர்கள், அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலிலே இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.
இங்கு பேசிய அமைச்சர், சூழலைச் சுத்தமாக பேணும் விடயத் தில், உலக சுற்றாடல் அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு நாடுகளினதும் சுற்றாடல் அமைச்சுக்கள், சர்வதேச மட்டத்தில் இதனுடன் தொடர்புகளைப்பேணி, வினைத்திறன்மிக்க சேவையாற்றுகின்றன.
அந்த வகையில், இலங்கையும் இந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றும். இதனால், கிடைக்கும் நிதியுதவிகள் முறையாக கையாளப்படும். நாடு, எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிகளைத் தீர்க்கும் இலக்கில், இந்நிதிகளை முறையாக கையாளலாம்.
மேலும்,சர்வதேச,உள்ளூரளவில் 1700 சுற்றாடல் முகவர் நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும், அனுமதிப்பத்திரங்களுக்கான கட்டணங்கள் உள்நாட்டில், முறையாக வசூலிக்கப்படும். இதனால், கிடைக்கும் வருமானங்கள் செயற்றிட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் சுற்றாடல்த்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
அமைச்சில் நடந்த இந்தச்சந்திப்பில், சுற்றாடல்துத் றை அமைச்சின் கீழுள்ள பத்து திணைக்களங்களதும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment