மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண் மாணவிகள் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
இப்பெண் மாணவிகள் இருவரும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலேய பட்டம் பெற்று தற்போது அப்பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளர்களாக நியமனம் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
முகாமைத்துவ பீடத்தில் (FACULTY OF MANAGEMENT AND COMMERCE) MBF.SANJEETHA ( LECTURER IN MIT) துறையிலும், கலைப் பீடத்தில் (FACULTY OF ARTS AND CULTURE) MHF.NUSKIYA ( LECTURER IN GEOGRAPHY) துறையிலுமே மேற்படி மாணவர்கள் நியமனத்தை பெற்றுள்ளனர்.
பெண்கள் கல்வியில் முன்னேற்றமடைய இது ஒரு எடுத்துக்காட்டு என்பதோடு வறுமையோ ஏனைய விடயங்களோ கல்வியில் சாதிப்பதற்கு தடையில்லை என்பதற்கு இவர்களது வளர்ச்சி ஒரு முன் உதாரணமாகும்.
இவர்கள் இருவருக்கும் KALKUDAH UNDERGRADUATE ASSOCIATION (KUA) வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment