எகிப்து முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் அபுல் பதூவுக்கு 15 ஆண்டுகள் சிறை - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

எகிப்து முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் அபுல் பதூவுக்கு 15 ஆண்டுகள் சிறை

எகிப்து முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் அப்தல்மொனைம் அபுல் பதூ, போலி செய்தி பரப்பியது மற்றும் அரச நிறுவனங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதற்காக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் தடுப்புக்காவலில் இருக்கும் பதூ மீதான வழக்கு விசாரணை கடந்த நவம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. 

அவருடன் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட மேலும் 24 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சகோதரத்துவ அமைப்பின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் முஹமது எசத் மீது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

அவர் ஏனைய குற்றச்சாட்டுகளில் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வருகிறார்.

பதூவின் கட்சியின் பிரதித் தலைவர் முஹமது அல் கசமுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment