இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை இரு வார காலம் தாமதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 2, 2022

இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை இரு வார காலம் தாமதம்

பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை பல தரப்பினரால் தாமதமானது. இந்நிலையில், இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வது அவசியமா அல்லது QR குறியீட்டை அறிமுகப்படுத்துவது போன்ற பிற காரணிகள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக QR குறியீட்டை அறிமுகப்படுத்துவது மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று கருதுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனவே, QR குறியீட்டை அறிமுகப்படுத்த தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த மாத இறுதிக்குள் தேவையான நடவடிக்கைகள் நிச்சயமாக இறுதி செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment