அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக மருந்து இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ககெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் மருந்து தட்டுப்பாட்டைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், சுகாதாரத் துறைக்கு எப்போதும் முன்னுரிமை வழங்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச மருந்துக் கூட்டுத்தாபனம், மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதோடு, குறிப்பாக கடனுதவிக்கான கடிதங்களை செலுத்தும் போது, மருந்துகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரியுள்ளது.
இல்லாவிட்டால், நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, டொலர் பிரச்சினை காரணமாக அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment