பொருட்களின் விலை அதிகரிப்பு முழு உலகிலுமேயே பிரதிபலிப்பு : இலங்கைக்கு மட்டுமானதல்ல என்கிறார் ஷெஹான் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 2, 2022

பொருட்களின் விலை அதிகரிப்பு முழு உலகிலுமேயே பிரதிபலிப்பு : இலங்கைக்கு மட்டுமானதல்ல என்கிறார் ஷெஹான்

பொருட்களின் விலை அதிகரிப்பு இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகள் இன்று 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு விநியோகச் சங்கிலியில் சிக்கல்கள் இருப்பதாகவும், அவற்றை மீட்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

அந்நிய செலாவணி வருமானத்தை இலங்கை இழந்துள்ளதாகவும், அடுத்த வருடத்திற்குள் அது மீளும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment