பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் மொஹமட் ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இந்த தீர்மானத்தின் மூலம் 41 வயதான ஹபீஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தனது உறவினை முடித்துக் கொண்டுள்ளார்.
2003 ஆம் ஆண்டு சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழக்கை ஆரம்பமாகியது.
கடந்த நவம்பரில் டி-20 உலகக் கிண்ணத்தில் அரையிறுதி போட்டியில் விளையாடியது அவரது இறுதி சர்வதேச ஆட்டமாக அமைந்துள்ளது.
ஹபீஸ் 55 டெஸ்ட், 218 ஒருநாள் மற்றும் 119 டி-20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 12,780 ஓட்டங்களை குவித்துள்ளார்.
ஹபீஸ் டிசம்பர் 2018 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், பின்னர் 2019 உலகக் கிண்ணத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு செய்தார்.
No comments:
Post a Comment