பலஸ்தீனப் பகுதியில் இருந்து ராக்கெட்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் நிலைகளை இஸ்ரேல் குறிவைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் மற்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை காசா பகுதியில் இருந்து டெல் அவிவ் கடற்பரப்பை நோக்கி இரண்டு ராக்கெட்டுகள் வீசப்பட்டதற்கு பதிலடியாக, சனிக்கிழமை நள்ளிரவில் விமானங்கள் ஹமாஸ் தளத்தை இலக்கு வைத்து குண்டுவீசியதாக இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
மட்டுப்படுத்தப்பட்ட இந்த தாக்குதலில் எந்த உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் கடந்த மே மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையே நடந்த கொடிய போரைன் பின்னர் அமைதியான ஒரு காலகட்டம் தொடர்ந்து வருகின்ற நிலையில் மீண்டும் ஒரு அச்சத்தை இந்த தாக்குதல் தோற்றுவித்துள்ளது.
No comments:
Post a Comment